கோடையில் மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை

கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

there is an no issue to power supply in summer days says minister senthil balaji

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் 5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி வைக்கிறார். இதனை முன்னிட்டு திருமண விழா நடைபெறும் இடத்தில், நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒருசில செங்கல் சூளைகள் சட்டவிரோதமாக செயல்படலாம். ஆனால் அனைத்து சூளைகளும் சட்டவிரோதம் என்பது தவறான கருத்து. நீதிமன்றம் சுட்டிகாட்டியுள்ள இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் செங்கல் உற்பத்தியை தொடங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. விரைவில் அதற்கு நல்ல தீர்வு வரும். 

there is an no issue to power supply in summer days says minister senthil balaji

ஏப்ரல், மே மாதங்களான கோடை காலங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய 4,200 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்காக டெண்டர் கோரப்பட்டு டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மின் விநியோகத்தில் எந்த வித பாதிப்பும் இருக்காது. 6200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சோலார் பூங்காவுக்காக டெண்டர் கோரபட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எந்த சிக்கலும் இல்லை. 

அந்த பணிகளில் எந்த தொய்வும் இல்லை. ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக இபிஎஸ் விமர்சனத்திற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, அதிமுகவிற்கு அவர்கள் நினைத்த அளவிற்காக வாக்குகள் கிடைக்கவில்லை. அந்த விரக்தியில் இதுபோன்ற கருத்துகளை கூறி வருகின்றனர். மேலும்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வெற்றி பயணம் என்பது வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொடக்கம். 

கள்ளக்காதல் விவகாரம்? பெண் கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு படுகொலை

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் முதல்வராக இருக்கின்ற வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள். அதற்கான தொடக்கம் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு.

there is an no issue to power supply in summer days says minister senthil balaji

அதிமுக வின் வாக்கு வங்கி அவ்வளவு தான். மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய இயக்கமாக கட்சியை வழிநடத்த வேண்டும். அந்த சூழல் அதிமுகவிடம் இல்லை. நேற்று சிலிண்டர் விலை தொடர்பாக அதிமுக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதிமுகவை பொருத்தவரை மக்களை பற்றி கவலை இல்லை. மக்களுக்கான வருங்கால திட்டங்களை பற்றி கவலை இல்லை. மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் நினைப்பதில்லை. 

டெலகிராமில் கல்லூரி பெண்களை ஏலம் விட்ட வாலிபர்; சைபர் கிரைம் காவல்துறை அதிரடி

அவர்களின் தேவை யார் டெல்லியில் போட்டி போட்டு அடிமையாக இருப்பது என்பது தான். யாராவது ஒரு இடத்தில் உண்மையாக இருக்க வேண்டும். ஒன்று மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அல்லது அந்த பொறுப்புகளை வழங்கியவர்களுக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் உண்மையாகவும், நம்பிக்கையாகவும் இல்லை என்றால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதுதான் அதிமுகவிற்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வைக்கக்கூடிய தீர்ப்பு என்று விமர்சித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios