திருமணமாகி 100-வது நாள மனைவியுடன் கோயிலில் கொண்டாடுகிறேன்' என மார்ச் 3-ம் தேதியன்று விவேக் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஈரோட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதி விவேக் -திவ்யா பரிதாபமாக உயிரிழந்தனர். 

கடந்த மார்ச் 3-ம் தேதி அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,"#100daysmarriagecelebrationwithpondati #temple #DV"எனப் பதிவிட்டிருந்தார். அத்துடன் கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.மார்ச் 5-ம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,Kolukkumalai Trekking & Camping Tour - New Age Travellers's eventஎனப் பதிவிட்டிருந்தார். கடைசியாக மார்ச் 10-ம் தேதி ட்ரெக்கிங் செல்வதற்கு முன்னர் மனைவி மற்றும் நண்பர்களுடன் எடுத்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்திருக்கிறார்.

அடுத்த வாரம் விடுமுறை முடிந்து விவேக் செல்லவிருப்பதால் புதுமணத் தம்பதி குரங்கணிக்கு வந்துள்ளனர். வந்த இடத்தில் இருவரும் தீயில் கருகி பலியான சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.