Asianet News TamilAsianet News Tamil

அறிவில்லையா.! பாய்ந்த கலெக்டர்.. அதிர்ந்த மக்கள்..

தேனி மாவட்டத்தில் திடீரென்று பேருந்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பேருந்தில் முக கவசம் அணியாமல் வந்த பயணிகளை, கடுஞ்சொற்களால் கடிந்து கொண்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

Theni Collector Action
Author
Theni, First Published Dec 5, 2021, 7:23 PM IST

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு திடீர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களிடம் முக கவசம் அணிய வேண்டியதின் அவசியத்தை எடுத்து வலியுறுத்தி வருகிறார்.

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் புதிதாக உருமாறியுள்ள ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தமிழகத்தில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்  தலைமை செயலாளர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் , தடுப்பூசி செலுத்துதல், முக கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.

Theni Collector Action

இதனையடுத்து கொரோனா தடுப்பூசி குறைவான சதவீதமே செலுத்தியுள்ள மாவட்டங்களில் அந்தெந்த ஆட்சியர்கள் உரிய கட்டுபாடுகள் விதித்து வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி, வேலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மளிகை கடை, நியாயவிலை கடை, மால்கள், டாஸ்மார்க் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் கொரோனா சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், இன்று  ஆண்டிப்பட்டி அருகே சுற்றுபயணத்தில் இருந்த அவர், அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்றை திடீரென நிறுத்தி ஆய்வு மேற்கொண்டார். பேருந்தில் ஓட்டுநரும், நடத்துனரும் முக கவசம் அணியாமல் இருப்பதை பார்த்த கலெக்டர், அவர்களை கடிந்துக் கொண்டார். 

Theni Collector Action

மேலும் அப்பேருந்தில் பயணம் மேற்கொண்ட பெரும்பாலான பொதுமக்கள் முக கவசம் அணியாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பேருந்தில் முக கவசம் அணியாமல் இருந்த பயணிகளை கடுஞ்சொற்களால் திட்டினார். அதோடு இல்லாமல், பேருந்தில் உள்ளே ஏறி பார்வையிட்ட அவர், அறிவில்லையா உங்களுக்கு..? இப்படி முக கவசம் அணியாமல் பேருந்தில் வருறீங்களே இது உங்களுக்கே நியாயமா? என்று பொதுமக்களிடம் கோபப்பட்டார். நீங்க மட்டும் கொரோனா வராமல் இருந்தால் போதுமா? பிற மக்கள் பாவம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார். 

Theni Collector Action

பின்னர், பேருந்து முழுவதும் ஆய்வு செய்த அவர், முக கவசம் அணியாமல் வந்த அனைவரிடமும் கட்டாயம் முகவரி வாங்கி நோட்டீஸ் அனுப்பி தலா 200 ரூபாய் வீதம் அபாரதம் செலுத்த சொல்லி தாதில்தாரிடம் உத்தரவிட்டார்.  

மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் கடுமையான சொற்களால் கடிந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  முக கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் செலுத்த சொல்லுங்கள் எனவும் மக்களுக்கு நிலைமை புரிய வைத்து முக கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துசொல்லுங்கள் என்றும் கூறும் நெட்டிசன்கள், இப்படி கடுஞ்சொற்களால் திட்டுவதை தவிர்த்திருங்களாலாமே என்று தங்கள் கருத்துகளை சொல்லி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios