theft in tharamani

சென்னையில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தரமணி பெரியார் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கார் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.

வழக்கம்போல் இன்று காலை பணிக்கு கிளம்பி சென்றுவிட்டார். இந்நிலையில் இவரது மனைவி வீட்டின் கதவைபூட்டிவிட்டு பக்கத்து தெருவில் சீட்டு பணம் கட்ட சென்றுள்ளார்.

சில மணி நேரங்களில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கபட்டு இருந்த 2 சவரன் நகையும், கால் கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து கிருஷ்ணமூர்த்தி தரமணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.