the youngster who raised question against super star got threatened

ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை, நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்த போது, சந்தோஷ் எனும் இளைஞர் அவரிடம் நீங்க யார்? என கேட்டார். தைரியமாக ரஜினியிடமே இப்படி ஒரு கேள்வியை கேட்டார் என்பதால், இணையத்தில் இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் சந்தோஷ்.

அதன் பிறகு சந்தோஷ் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வந்தது. அதில் சந்தோஷ் ” ரஜினியை புகழ்ந்து பேசியதுடன், ரஜினி மீது உள்ள உரிமையினால் தான் அவரிடம் அப்படி கேட்டேன். என கூறி இருந்தார். மேலும் அதில் ரஜினியுடனான சந்தோஷின் உரையாடலை, மீடியாக்கள் தான் திரித்து கூறிவிட்டன” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஒரு மிகப்பெரிய பிரபலத்தையே தைரியமாக கேள்வி கேட்ட இளைஞன் என, ஒரு பக்கம் சந்தோஷை கொண்டாடி கொண்டிருந்த இளைஞர்களுக்கு, இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. யாராவது சந்தோஷை மிரட்டி இப்படி பேச வைத்திருப்பார்களோ? என்ற சந்தேகமும் அப்போது இணையத்தில் பரவியது.

அதை நிரூபிக்கும் வகையில் செய்தி ஒன்று, ஒரு ஆங்கில நாளிதளில் வெளியாகி இருக்கிறது. அதில் சந்தோஷே கூறியதாக ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் படி சந்தோஷை இவ்வாறு பேசுமாறு இரவோடு இரவாக, சிலர் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் உடல் நிலை சரியான பிறகு, ரஜினியை நேரில் வந்து சந்திக்கவும் அவர்கள் உத்தரவிட்டதாக அந்த நாளிதளில் கூறப்பட்டிருக்கிறது.