The wife of her husband was.

மீன் குழம்பு சமைக்காததால் கட்னவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சுரேஷ் மனைவி சத்யாவிடம் மீன் வாங்கி கொடுத்து விட்டு அதனை சமைத்து வைக்க சொல்லிவிட்டு படி கூறி விட்டு, வெளியே சென்று விட்டார். ரொம்ப நேரம் கழித்து வீட்டிற்கு வந்த கணவன் சுரேஷ், இன்னும் மீன்குழம்பு வைக்கவில்லையா என கேட்டிருக்கிறார். இன்னும் வைக்கவில்லை கொஞ்சம் நேரம் போகட்டும் என சொல்லியிருக்கிறார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதனால், மிகுந்த மனவேதனையில் இருந்த அடைந்த சத்யா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மனைவியை காப்பற்ற முயன்ற சுரேஷும் விபத்தில் சிக்கினார். உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணவன் சுரேஷ், மனைவி சத்யா இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.