Asianet News TamilAsianet News Tamil

ஒபிஎஸ் கிணறு விவகாரம் - நாளை முதல் வெடிக்கிறது போராட்டம்...

The village committee said that the first strike will be held tomorrow until the ops well in Lakshmipuram.
The village committee said that the first strike will be held tomorrow until the ops well in Lakshmipuram.
Author
First Published Jul 25, 2017, 7:10 PM IST


லட்சுமிபுரத்தில் உள்ள ஒபிஎஸ்ஸின் கிணற்றை பெறும் வரை நூதன முறையில் நாளை முதல் போராட்டம் நடத்தப்படும் என கிராம கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தில்  ராட்சத கிணறு ஒன்று உள்ளது. இதனால் அப்பகுதியில் மிகுந்த குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டது.

குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் அப்பகுதியில் தோண்டப்பட்டுள்ள ராட்சத கிணறு தான் எனவும், அது முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு சொந்தமானது எனவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் தோட்டத்தை நோக்கி படையெடுத்து கிணற்றை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து மதுரை வந்த ஒபிஎஸ் லட்சுமிபுரத்தில் உள்ள கிணற்றை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க தயார் என தெரிவித்தார்.

இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சிடைந்தனர். இதைதொடர்ந்து தான் இலவசமாக தருகிறேன் என ஒபிஎஸ் கூரிய கிணறு மற்றும் நிலம் தனி நபரான சுப்புராஜ் என்பவருக்கு விற்கப்பட்டுள்ளதும், கடந்த 12 ஆம் தேதி தான் இது விற்பனையாகியுள்ளது எனவும் தெரிய வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கமெட்டியில் பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

இதைதொடர்ந்து லட்சுமிபுரத்தில் உள்ள ஒபிஎஸ்ஸின் கிணற்றை பெறும் வரை நூதன முறையில் போராட்டம் நடத்தப்படும் என கிராம கமிட்டியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டம்  நாளை முதல் ஆரம்பமாகும் எனவும், கிணற்றை இலவசமாக பெறாமல் பணம் அளித்தே பெறுவோம் எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள இந்த கிணற்றிற்கு அதிகாரிகளும் துணை போயுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios