புதுச்சேரி அமைச்சர் உறவினர் நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு (தனி) சட்டமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது. பெண்களுக்கு இலவச பிங்க் பேருந்து, பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய சிசிடிவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது. 

அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் அடிக்கடி பல்வேறு இடங்களில் ஆய்வு செய்வது, மக்களிடையே குறைகளை கேட்பது என படுபிஸியாக இருக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட துறையை மிகவும் சிறப்பாக கவனித்து வருவதாக பெயர் எடுத்து இருக்கிறார்.

Scroll to load tweet…

அண்மையில் திருச்சியில் நடைபெற்ற தனது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சந்திர பிரியங்கா மேடையில் பெண்களுடன் இணைந்து சினிமா பாடலுக்கு நடனமாடினார். தற்போது இந்த காட்சிகள் இணைத்தில் வைரலாகி வருகிறது.