The Valiyammamal has demanded that the Tamil Nadu government should further extend Parolevalans parole.
பேரறிவாளனின் பரோலை தமிழக அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜோலார் பேட்டையை சேர்ந்த பேரறிவாளன் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
26 ஆண்டுகளுக்கு அவரது தந்தையின் உடல்நலத்தை கவனித்து கொள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 24 ந்தேதி பரோல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த பரோல் கடந்த மாதம் 24 ஆம் தேதி முடிவடையும் நிலையில் பரோல் காலத்தை நீட்டிக்குமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார்.
அதைதொடர்ந்து மேலும் ஒரு மாத காலம் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இந்த நீட்டிக்கப்பட்ட பரோல் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், பேரறிவாளனின் பரோலை தமிழக அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் பரோலை தமிழக அரசு நீட்டித்து தரும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
