பாஜக அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் பணியிடங்களை காலியாக இருந்ததையடுத்து அங்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு 3வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் காலியாக இருந்த ஆளுநர்கள் பதவியிடங்களை நிரப்பியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்.

அதன் படி,

மகாராஷ்டிரா - சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுச்சேரி - கே.கைலாஷ்நாதன், ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ்

தெலங்கானா - ஜிஷ்னு தேவ் சர்மா

ராஜஸ்தான் - ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, மராட்டிய பேரவை முன்னாள் சபாநாயகர்

பஞ்சாப் - குலாம் சந்த் கட்டாரியா

சத்தீஸ்கர் - ராமன் தேகா

மேகாலயா - விஜயசங்கர்

ஜார்க்கண்ட் - சந்தோஷ் கன்வார்

தெலங்கானா - ஜிஷ்னு தேவ் சர்மா

அசாம் - லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா (மணிப்பூர் - கூடுதல் பொறுப்பு)

சிக்கிம் - ஓம் பிரகாஷ் மாத்தூர்

இதே போல பஞ்சாப் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தின் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் அதனை குடியரசுத் தலைவர் ஏற்று புதிய ஆளுநரை நியமித்துள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் இந்த மாதத்தோடு நிறைவடையவுள்ள நிலையில் தமிழகத்தில் புதிய ஆளுநர் தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிகாலம் நீட்டக்கப்படும் என கூறப்படுகிறது.