Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மேலும் 2 அமைச்சகங்கள் ஒப்புதல்…!!!

The two ministries have approved the emergency draft draft for a year out of the selection from the Exam.
The two ministries have approved the emergency draft draft for a year out of the selection from the Exam.
Author
First Published Aug 16, 2017, 10:12 PM IST


நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவுக்கு மேலும் இரு அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளது.

சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில் சுகாதாரம், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு விலக்களிக்கப்படும் என்றும், நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இதையடுத்து, தமிழக அரசு அவசர சட்ட முன் வடிவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. தமிழக அரசின் அவசர சட்ட முன்வரைவு மற்றும் கூடுதல் ஆவணங்களை சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் சட்ட அமைச்சத்திற்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த 3 அமைச்சகங்களும் அவசர சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, அவசர சட்ட முன்வரைவு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க அவசர சட்ட வரைவுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதைதொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவுக்கு மேலும் இரு அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளது.

சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில் சுகாதாரம், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios