Asianet News TamilAsianet News Tamil

பேருந்து பயணிகளிடம் கைகலப்பா.? ஓட்டுநர், நடத்துனர்களுக்கு எச்சரிக்கை.! சுற்றறிக்கை வெளியிட்ட போக்குவரத்து துறை

அரசு பேருந்துகளில் பயணிகளிடம் தவறான முறையில் பேசவோ, கைகலப்புகளில் ஈடுபடவோ கூடாது என ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The transport department has advised bus conductors and drivers to behave politely with passengers
Author
First Published Nov 16, 2022, 8:54 AM IST

போக்கவரத்து ஊழியர்களுக்கு சுற்றறிக்கை

பேருந்து பயணிகளிடம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியின் போதுதவறான பேச்சுக்கள், கைகலப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  போக்குவரத்துத் துறை செயலாளர் அவர்கள் அறிவுறுத்துதலின்படி செப்டம்பர் 2022 மாதத்திற்கான தரவுகளை ஆய்வு செய்கையில் பல்வேறு வகையான ஒழுங்கீனங்கள் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது. எனவே, மாநகர போக்கவரத்து கழக அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கீழ்குறிப்பிட்டவாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தினை நிறுத்தி அங்கு காத்திருக்கும் பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி/இறக்கி செல்லுதல் வேண்டும்.

விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி... கரூரில் நிகழ்ந்த சோகம்!!

The transport department has advised bus conductors and drivers to behave politely with passengers

அதிக கட்டணம் வசூலிக்க கூடாது

காலஅட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்குதல் வேண்டும். வழித்தடம் மாறி வேறு பகுதிகளில் /சாலைகளில் பேருந்துகளை இயக்க கூடாது. மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி /இறக்கி செல்லுதல் வேண்டும். மாறாக பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடக் கூடாது. மாநகர போக்குவரத்து கழகத்தில், சாதாரண, விரைவு, சொகுசு, குளிர்சாதன பேருந்துகளில் அரசாணைப்படி நிர்ணயிக்கப்பட்ட சரியான பயணக் கட்டணங்களையே பயணிகளிடம் உரிய பயணச்சீட்டு அளித்து வசூலித்தல் வேண்டும். குறிப்பாக தவறான பயணக் கட்டணங்களை அதாவது பேருந்தில் ஏறிய பயணிக்கு குறைவான அல்லது அதிகமான பயணக் கட்டங்களை வசூலித்தல் கூடாது.

தவறான சிகிச்சை சிறுமி உயிரிழந்த விவகாரம்! இப்போ ரத்தம் கொதிக்கவில்லையா? ஸ்டாலினிடம் நாராயணன் திருப்பதி கேள்வி!

The transport department has advised bus conductors and drivers to behave politely with passengers

கைகலப்பில் ஈடுபடக்கூடாது

மேலும், பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு உரிய சுமைக்கட்டண பயணச்சீட்டுகளை நடத்துநர் வழங்க வேண்டும். ஓட்டுநர், நடத்துநர்கள் தமது பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்துக்கொள்வதை அறவே தவிர்த்து, அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டும். மாறாக பணியின்போது வீண்வார்த்தைகள் மற்றும் தவறான பேச்சுக்கள், கைகலப்பு போன்றவற்றினை அறவே தவிர்த்தல் வேண்டும் என போக்குவரத்து ஊழியர்களுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

ரூ.1000 போதாது..! மழையால் பாதித்த அனைவருக்கும் ரூ.5000 வழங்கிடுக..! திமுக அரசை வலியுறுத்திய மார்க்சிஸ்ட்
 

Follow Us:
Download App:
  • android
  • ios