தஞ்சை அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் ஒரத்தநாடு ஆணைக்கார தெருவில் வசித்து வருபவர் அனந்தகுமார். இவர் தஞ்சாவூரில் உள்ள தமது உறவினரின் வீட்டு திருமணத்திற்காக நேற்று இரவு சென்றுள்ளார். 

திருமணம் முடிந்த பின்பு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அனந்தகுமார் அதிர்ச்சியுற்றார். 

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பொலீசார் கைரேகை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்தனர். 

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.