இராசிபுரம்,
இராசிபுரத்தில் உள்ள அனைத்து கோவில்களும் தை அமாவசையை முன்னிட்டு அடியார்கள் கூட்டத்தால் நிரம்பின.
தை அமாவாசையை முன்னிட்டு இராசிபுரத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு, திருமுழுக்கு, தீப ஆராதனை நடந்தது.
இதனையொட்டி அம்மன் சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அடியார்களுக்கு காட்சித் தந்தார்.
காலை முதல் இரவு வரை எண்ணற்ற அடியார்கள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசித்தனர். அதேபோல் இராசிபுரத்தில் உள்ள புகழ் பெற்ற கைலாசநாதர் கோவில், எல்லை மாரியம்மன் கோவில், பாலமுருகன் கோவில், அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில், பொன் வரதராஜ பெருமாள் கோவில், பட்டை பெருமாள் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், அழியா இலங்கை அம்மன் கோவில், அத்தனூர் அம்மன் கோவில், ஆவுடையார் கோவில், புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோவில், மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில்களிலும் திரளான அடியார்கள் வந்திருந்னர்.
இதனால் கோவில்கள் அனைத்தும் அடியார்கள் கூட்டத்தால் நிரம்பியது.
