திரும்பத் திரும்ப அவமானம்..! பாஜக சவகாசமே வேண்டாம்..! ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு..!
அதிமுக ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என பாஜக நினைக்கலாம். எங்களைப் பொறுத்தவரையிலும் அந்த இழப்பை வேறு வகையில கூட ஈடுகட்டிக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை எடப்பாடியிடம் இருக்கிறது.

தனிக்கட்சி இல்லை என்கிற முடிவில் இருக்கிற ஓபிஎஸ் தனது உரிமை மீட்புக்குழுவுக்கு உரிமை மீட்பு கழகம் என பெயரை மாற்றி இருக்கிறார். எப்படியும் பாஜக தலைமை தன்னை அதிமுகவில் இணைத்து விடும் என நம்பிக்கையில் இருந்தவர் தன்னை பாஜக மீண்டும் ஏமாற்றி விட்டதாக புலம்ப ஆரம்பித்திருக்கிறார்.
ஓபிஎஸ் தற்போது என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் இணைவதில் தயக்கம் காட்டி வருகிறார். இது 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஜூலை மாதம் ஓபிஎஸ், பாஜக தலைவர்களான பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தன்னை புறக்கணித்ததாகக் கூறி, என்.டி.ஏ கூட்டணியிலிருந்து வெளியேறினார். அப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்தார். அதன் பிறகு டிசம்பர் மாத ஆரம்பத்தில் பாஜக தரப்பில் இருந்து மீண்டும் இணைய அழைப்பு வந்தது. ஓபிஎஸ் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்தார். தற்போது அதிமுக-பாஜக கூட்டணி வலுவடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைவதில் தயக்கம் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓபிஎஸுக்கான தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கப்படுகிற தொகுதிகளில் ஒதுக்குகிறோம் என பாஜக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவரது ஆதரவாளர்கள், அதிமுகவில் சேர்த்துக் கொண்டால் போகலாம். ஆனால் அவர்களுக்கு கொடுக்கிற தொகுதிகளில் பிரித்துக் கொடுத்தால் போக வேண்டாம் எனக் கூறி உள்ளனர். ஆனால், அதிமுகவில் ஓபிஎஸை சேர்த்துக் கொள்ள மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியதால் அதிமுக் ஒருங்கிணைப்பையே பாஜக ஒட்டுமொத்தமாக கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இணைந்தால் அதிமுக ஒருங்கிணைப்பு, இல்லையேல் என்.டி.ஏ கொடுக்கும் தொகுதிகளில் வாய்ப்பில்லை என முடிவெடுத்து இருக்கிறார் ஓபிஎஸ். என்.டி.ஏ கூட்டணியில் அதிமுகவே முதன்மைக் கட்சியாக உள்ளது. இபிஎஸ் தான் கூட்டணியின் முகமும், முதல்வர் வேட்பாளரும். கூட்டணி முடிவுகளை இபிஎஸ் எடுப்பார் என்று அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஓபிஎஸ், டிடிவி. தினகரன் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவினர் உள்ளடி வேலை செய்து தோற்கடிக்கலாம் என்ற அச்சம் தான் அவரது தயக்கத்திற்கான காரணங்கள். இதனால் ஓபிஎஸ் தரப்பு பாஜகவுடன் இணைந்தாலும் முழு நம்பிக்கை இல்லை.
இதனால், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அல்லது தனிக்கட்சி தொடங்கி போட்டியிடுவது குறித்தும் ஓபிஎஸ் ஆலோசித்து வருகிறார். தற்போதைய நிலையில் ஓபிஎஸ் முடிவு இன்னும் உறுதியாகவில்லை. 2026 தேர்தலுக்கு முன் அவரது அடுத்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இந்நிலையில், ஓபிஎஸை அதிமுகவில் இணைப்பது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அதிமுகவை சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான செம்மலை, ‘‘தனி மனிதன் பிரிந்தால் கூட ஒரு இயக்கத்துக்கு இழப்பு இருக்கும். அதை நான் மறுக்கமாட்டேன். ஆனால் அப்படி ஏற்பட்ட இழப்பைக்கூட வேறு வகையில் தான் நாங்கள் சரிகட்டி ஆக வேண்டும். ஒருவர் வெளியேறுவதால் இழப்பு ஏற்படுகிறது என்று சொன்னால் அதற்காக அவரையே சேர்த்துதான் அந்த இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்பது அல்ல. அவசியமும் இல்லை. அவர்களால் ஏற்பட்ட இழப்பை வேறு வகையில் நம்ம சரி கட்டிக்கொள்ளலாம்.
அதிமுக ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என பாஜக நினைக்கலாம். எங்களைப் பொறுத்தவரையிலும் அந்த இழப்பை வேறு வகையில கூட ஈடுகட்டிக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை எடப்பாடியிடம் இருக்கிறது. அதிமுக ஒன்று சேர்வது அதிமுக, பாஜக இரண்டு பேருக்குமே நல்லது. ஏனென்றால் பாஜகவின் நோக்கமும், குறிக்கோளும் எங்களுடைய நோக்கம் குறிக்கோளும் திமுக வீழ்த்தப்பட வேண்டும். அதில் பாஜக உறுதியாக இருக்காங்க. நாங்களும் உறுதியாக இருக்கிறோம்’’ என எதையும் தெளிவாக கூறாமல் நழுவினார் செம்மலை.
‘‘திமுக-வின் கனவு மண்ணோடு மண்ணாக போனது..! என வெளியான வாக்காளர் பட்டியல் குறித்து கருத்துச் சொன்னார் இபிஎஸ். அதிமுகவை ஒருங்கிணைக்காமல் போனால் இபிஎஸின் கனவு மண்ணோடு மண்ணாகப் போனது என அவர் தேர்தலுக்கு பிறகு புலம்பும் நிலைமை ஏற்படும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
