Asianet News TamilAsianet News Tamil

மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு யாருக்கும் பயப்படாது – மோடிக்கு சவால் விடுத்த தமிழக அமைச்சர்...

The Tamil Nadu government will not be afraid of the beef issue
The Tamil Nadu government will not be afraid of the beef issue - tamil Nadu minister challenging Modi
Author
First Published May 30, 2017, 1:01 PM IST


மாட்டிறைச்சி விவாகரத்தில் தமிழக அரசு யாருக்கும் பயப்படாது எனவும், ஜல்லிக்கட்டை போன்று இந்த விவகாரத்திலும் தமிழக அரசு திறமையாக கையாளும் எனவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்த கூடாது என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என தெரிவித்துள்ளனர்.

இதற்கு தமிழக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டங்களையும் அறிவித்துள்ளனர்.

ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்திருந்தார்.   

இதனிடையே மத்திய அரசின் இந்த தடைக்கு எதிராக செல்வ கோமதி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் உணவு என்பது அடிப்படை உரிமை எனவும், அதில் அரசு தலையிட அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாட்டிறைச்சி விவாகரத்தில் தமிழக அரசு யாருக்கும் பயப்படாது எனவும், ஜல்லிக்கட்டை போன்று இந்த விவகாரத்திலும் தமிழக அரசு திறமையாக கையாளும் எனவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios