உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 15 நாளில் நடத்தக்கோரி தமழ்நாடு பொது நல வழக்காடு மையம் சார்பில் உச்சநீதிமின்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இஇந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்துக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் குறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

15 நாட்களுக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி கே.கே. ரமேஷ், என்பவர் தாக்கல் செய்த வழக்கில் மேற்கண்ட உத்தரவை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.