அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பும்படி, காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு, தமிழ்நாடு அரசு உள்துறை துணை செயலாளர் உதயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில், சென்னையில் வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக தண்டயார்பேட்டை காவல்நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, தாக்கப்பட்ட திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து மார்ச் 12 ஆம் தேதி புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அறிக்கை அனுப்ப தமிழக அரசு உத்தரவு
சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தலைவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தலைவர் ஆகியோருக்கு ஜெயக்குமார் கடிதம் எழுதினார்.அந்த கடிதத்தில், தன்னை கைது செய்த போது, காவல் துறை துணை கமிஷனர் சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் பூபாலன், சங்கர பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி சம்பவத்திற்குப் பிறகு போலீஸ் உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ள ரவி ஆகியோர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டதாகவும் , அவர்கள் மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியிருந்தார். மேலும் சென்னையில் உள்ள மனித உரிமை ஆணையகத்திலும் ஜெயக்குமார் நேரில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், ஜெயக்குமார் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பும்படி காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு தமிழ்நாடு உள்துறை துணை செயலாளர் உதய்பாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படியுங்கள்
