கடந்த சில தினங்களாக அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களும், காவல் துறையினரும் மோதல் போக்குடன் செயல்பட்டு வந்த நிலையில், இந்த பிரச்சினைக்கு தற்போது வீடியோ வாயிலாக தீர்வு காணப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசுப் பேருந்தில் ஏறிய காவலர் ஒருவர் தாம் இலவசமாக பயணிக்க அதிகாரம் உள்ளதாக தெரிவித்து பயணச் சீட்டு எடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், நடத்துநரோ வாரண்ட் இல்லாமல் யாரையும் அழைத்துச் செல்ல முடியாது. வாரண்டை காட்டுங்கள் அல்லது பயணச் சீட்டை வாங்கிக் கொள்ளுங்கள் என விடாப்பிடியாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காவலர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க எவ்வித சலுகையும் கிடையாது என அறிவிப்பு வெளியிட்டது. போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பால் இரு துறைகள் இடையேயான பிரச்சினை பூதாகரமாக கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்துக் காவலர்கள் அரசுப் பேருந்துகளை குறிவைத்து விதிமீறல் என்ற பெயரில் அபராதம் விதித்து வந்தனர்.

அச்சச்சோ என்ன இவ்ளோ ஆச்சாரமா பேசறேல்? காஞ்சியில் வீதிக்கு வந்த வடகலை, தென்கலை பிரச்சினை

இந்நிலையில் முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, உள்துறை செயலாளர் அமுதாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளுக்கு இது தொடர்பாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

45 பயணிகளுடன் வந்த சுற்றுலாப் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு; உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்த சோகம்

இதனிடையே பிரச்சினைக்கு காரணமாக இருந்த காவலரும், அவரை டிக்கெட் எடுக்கக்கோரி வற்புரித்தி அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பரப்பிய நடத்துநரும் இணைந்து தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் டிக்கெட் எடுக்க மறுத்தமைக்காக காவலரும், அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பரப்பியமைக்காக நடத்துநரும் ஒருசேர வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றனர். மேலும் பிரச்சினையை இத்தோடு முடித்துக் கொண்டு இரு துறைகளும் ஒற்றுமையுடன் பணியாற்றுவோம் என்ற வகையில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.