The state release to conduct plus one public exam

+1 பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது :

மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

+1 பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மதிப்பெண்கள் 1200 லிருந்து 600ஆக குறைக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் மேல்நிலை மாணவர்களுக்கு 3 மணி நேரம் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு எழுதும் நேரம் 3மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச தேர்ச்சி விகிதம் 35 சதவிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாக புதிய பாடத்திட்டங்கள் இருக்கும்.

முதலாம் ஆண்டு செய்முறை தேர்வு இரண்டாம் ஆண்டுடன் சேர்த்து நடத்தப்படும்.

கல்லூரிகளில் உள்ள நடைமுறைகளின் கீழ் தேர்வு எழுதலாம்.

புதிய பாடத்திட்டங்களை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

தமிழ் பண்பாடு, கலாச்சாரம் சிதைவுறாமல் புதிய பாட திட்டங்கள் அமையும்.

செய்முறை கையேடு மாணவர்களுக்கு அரசே வழங்கும்.

மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஜூன், ஜூலை மாதங்களில் தவறிய பாடத்தை எழுதலாம்.

முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பள்ளி வேலை நாட்களில் மாலை ஒருமணி நேரம் சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2018 - 2019 ல் மாற்றம் செய்யப்படும்.

2,7,10,12 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2019- 2020 ல் மாற்றம் செய்யப்படும்.

3, 5, 8, ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2020 - 2021 ல் மாற்றம் செய்யப்படும்.

6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பின் அறிவியல் ஒரு பகுதியாக ஐ.டி கல்வி கற்பிக்கப்படும்.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றன.

தமிழர் வரலாறு, கலாச்சராம் உள்ளிட்டவை புதிய பாடத்திட்டத்தில் இடம்பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.