The son fired father
குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தேனியில் நடந்துள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் விக்னேஷ்வர். இவர் ஆயுதப்படை காவல் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
தந்தை செல்வராஜுக்கும், மகன் விக்னேஷ்வருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் இன்றும் பிரச்சனை எழுந்தது.
அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ்வர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, தந்தை செல்வராஜை சுட்டுக் கொன்றுள்ளார். துப்பாக்கிசூடு சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஆயுதப்படை காவலர் விக்னேஷ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
