இன்று தொடங்குகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு..இதை பின்பற்றியே ஆகணும் தெரியுமா ?

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

the school education department has published the rules to be followed in the 10th public exams

இந்த தேர்வை மொத்தம் பள்ளிகள் மூலம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 30 ஆயிரத்து 765 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வுக்காக தமிழகம் புதுச்சேரியில் 3,936 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 51ஆயிரத்து 710 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 308 இடங்களில் கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

the school education department has published the rules to be followed in the 10th public exams

காலை 10 மணிக்குத் தொடங்கும் தேர்வு பகல் 1.15 மணிக்கு நிறைவடையும். இந்தத் தேர்வு மே 30-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. மாணவ – மாணவியர் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமில்லை என்றாலும், உடல் நிலை பாதிப்புள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், மாணவர்கள், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு மைய வளாகங்களுக்குள் செல்போன்களை எடுத்துவரக்கூடாது என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

பொதுத்தேர்வின் போது மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டியவை விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் முதல் 10 நிமிடம் வினாத்தாளை படித்து பார்க்கவும்,அடுத்த 5 நிமிடம் தேர்வர்கள் விவரங்களை சரிபார்க்க வேண்டும். 10.15-க்கு ஐந்து முறை மணி அடிக்கப்படும்,அப்போது மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பிக்கலாம். 

1.10-க்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும்,அந்த நேரத்தில் தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள் பெற்றிருப்பின் அதனை முதன்மை விடைத்தாளுடன் வெள்ளை நூல் கொண்டு கட்டவேண்டும் என்றும் 1.15க்கு தேர்வு நேரம் முடிவுக்கு லாங் பெல் அடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன்கள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்/ இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.

the school education department has published the rules to be followed in the 10th public exams

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும்.மேலும்,மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க ஆயிரம் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால்,தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios