டோல்கேட்டில் ரவுடிகளுக்கு ரூ.1000 சம்பளம்..! 

நாம் தினமும் பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் சில ரவுடிகளை பணியமர்த்தி, அவர்களுக்கு தினக்கூலியாக டோல்கேட்டில் ரூ.1000 கொடுக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி  உள்ளது. 

டோல்கேட் கொள்ளைகளை தட்டி கேட்டால் அடி உதை தான் கிடைகிறது என பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

ஒவ்வொரு டோல்கேட்டிலும் அடியாட்கள் உள்ளதாகவும், டோல்கேட் கொள்ளைகளை தட்டி கேட்டால் அடியாட்கள் கொண்டு விரட்டப்படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார். 


 மேலும் இந்த விவகாரம் மாநில அரசுக்கும் தெரியும் என்றும், மேலும் பல சங்கத்திற்கும் இதில் பங்கு உண்டு என்றும் தெரிவித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல், டோல்கேட்டில் உள்ள ஒவ்வொரு ரவுடிக்கும் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.