திருநெல்வேலி பாளையங்கோட்டையில் காவல்நிலையத்தின் பின்புறம் உள்ள ஒய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தெற்கு பஜாரில் அரசு அதிகாரி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று உறவினரின் விழா நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தெற்கு பஜாரில் உள்ள அரசு ஊழியரின் வீட்டின் பால்கனி வழியாக மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.