The relatives complained that the kidneys were missing after the ambulance in Kanchipuram hospital.

காஞ்சிபுரம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தராததால் சிறுநீரகம் செயலிழந்த மாணவி உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

காஞ்சிபுரம் மருத்துவமனையில் பத்தாம் வகுப்பு மாணவி சரிகா ஒருவர் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படவே மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

ஆனால் மாணவியை அழைத்து செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்து வந்ததாக தெரிகிறது. 

7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மாணவி ஆம்புலன்ஸில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து மாணவி உயிரிழந்ததற்கு காரணம் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலஸ் தராமல் இழுக்கடித்து வந்ததுதான் எனவும் பிற்பகலில் இருந்தே நாங்கள் கேட்டுவந்தும் அவர்கள் தரவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னை செல்ல 7 மணி நேரத்திற்கு பிறகே ஆம்புலன்ஸ் தந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.