உஷார்..! தமிழகத்தில் வெளுத்து வாங்க போகுது மழை..!

கேரளா முழுவதும் மற்றும் கர்நாடக எல்லையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளது.

இதனை தொடர்ந்து, தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து  வருகிறது. இந்நலையில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால். கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல  வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா கடலோரப் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கேரள மாநிலத்தில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கும் நிலையில், மீண்டும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியானதை அடுத்து மேலும் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


 நிலைமை சமாளிக்க முடியாமல், கேரள அரசு மத்திய அரசின் உதவியை நாடி உள்ளது, தற்போது மீட்புக் குழுவினர் கேரளா விரைந்து மும்முரமாக மீது பணியை செய்து வருகின்றனர். பல மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வரப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  மேலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது