The police have filed a case under three sections on 23 people including three women who were involved in the road accident in Chennai Puducherry.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை புதுப்பேட்டையில் சாலைமறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 23 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீட் தேர்வின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றதால் தமது மருத்துவ கனவு கலைந்து விட்டதே என நினைத்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகள், இளைஞர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் அரசியல் கட்சிகளும் சினிமா பிரபலங்களும் நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். 
இந்நிலையில், சென்னை புதுப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஏராளமானோர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்துக்கு தூண்டியதாக கூறி 3 பெண்கள் உட்பட 23 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.