ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 12,000..! மோசடி செய்த நகைக்கடை அதிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்

ஒரு லட்சம் கட்டினால் ஒன்னரை லட்சத்துக்கு தங்க நகை என பல்வேறு சலுகைகள் அறிவித்து கடந்த இரண்டு மாதங்ககுக்கு முன்பு 2000 கோடிக்கு மேல் மோசடி செய்த புகாரில் நகைக்கடை அதிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 
 

The police arrested the jewelery shop owners who had defrauded several crores of rupees by claiming to give high interest rates

பொதுமக்களை ஏமாற்றிய நகைக்கடை

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு சிறிது சிறிதாக சேமித்து வைத்த பணத்தை இழப்பவர்கள் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. எத்தனை செய்திகள் வெளியானாலும் மக்கள் தொடர்ந்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்யும் கதையும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. அந்த வரிசையில் சென்னை நொளம்பூர் ஏ ஆர் டி நகைக்கடையில் தான் தற்போது புதிய மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த நகைக்கடையில்  தொடர்ந்து கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வந்தது.  அதில் ஒரு முறை ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வட்டி, அசல் விலையில் தங்க நகை, ஒரு லட்சம் கட்டினால் ஒன்னரை லட்சத்துக்கு தங்க நகை என பல்வேறு சலுகைகள் அறிவித்து என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இந்த நம்பி ஏராளமானவர்கள் தங்களது சிறிது சிறிதாக சேமித்த பணத்தை அந்த நகை கடையில் முதலீடு செய்தனர்.

The police arrested the jewelery shop owners who had defrauded several crores of rupees by claiming to give high interest rates

 2000ஆயிரம் கோடி மோசடி

ஆனால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் நகைகடை நிறுவனம் பொதுமக்களை ஏமாற்ற ஆரம்பித்தது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் முதலீடுகளை பெற்று  மக்களுக்கு அவர்களுக்கான மாத தொகையை சரியாக வழங்காமலும் ஏமாற்றியது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பல கட்டங்களாக போராட்டம் நடத்திவந்தனர். பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக பல மாதங்களாக நிறுவனத்தின் இயக்குனர்களான ஆல்வின் ஞானதுரை மற்றும் ராபின் ஆகியோர் வெளிநாட்டில் பதுங்கி இருந்த நிலையில் அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழங்கப்பட்டது.

The police arrested the jewelery shop owners who had defrauded several crores of rupees by claiming to give high interest rates

நகைக்கடை அதிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்

இந்நிலையில் இந்த மோசடி நிறுவன நிர்வாகிகள் ஆல்வின் ஞானதுரை,ராபின் ஆகியோரை டெல்லியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் டெல்லி சென்று இரண்டு பேரையும் கைது செய்தனர்.  இதனையடுத்து நொளம்பூரில் ஏ.ஆர் டிவணிக வளாகத்தில் நடைபெற்ற 9 மணி நேர  சோதனையில் முதலீட்டாளர்களுடைய சேமிப்பு கணக்குகள் இருக்கக்கூடிய கணினிகள்,  முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13 லேப்டாப், மடிக்கணினி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை குற்றப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்

இதையும் படியுங்கள்

காதலியைக் கொன்று உடலை 2 வாரமாக வீட்டு தொட்டியில் அடைத்து வைத்த இளைஞர்! வசமாக சிக்க வைத்த செல்போன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios