The police arrested a man who was murdered by his wife who had strangled her to Facebook and Vats.
பேஸ்புக், வாட்ஸ் அப்பில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கும், திருச்சி, பாதர்பேட்டை பகுதியை சேர்ந்த மேகலா என்பவருக்கும் கடந்த 8 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு பிரியதர்சினி என்ற 7 வயது மகள் உள்ளாள். இந்நிலையில் மேகலாவுக்கும், கணேசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மேகலா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் மேகலா மகளுடன் தமது அம்மா வீட்டில் வசித்து வந்தார்.
இதனிடையே அவ்வபோது, இருவரும் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இருவரும் தம்மம்பட்டி மண்கரடு மலை அடிவாரத்தில் இருக்கும் தனியார் பள்ளி அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் கணேஷ் மேகலாவை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மேகலா பேஸ்புக், வாட்ஸ் அப்பில் வேறு ஒரு வாலிபருடன் தொடர்பு வைத்திருந்ததும் அதனாலேயே அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் கணேஷ் வாக்குமூலம் அளித்தார்.
