நீலகிரி அருகே கல்லூரி மாணவனை கடத்தி 10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்பீர் சர்மா. இவரது மகன் நிதின்சர்மா கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் தினமும் கல்லூரி வாகனத்தில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். அதேபோல் இன்றும் கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்பீர் சர்மா குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், தனது மகன் நிதின் சர்மா கல்லூரி வாகனத்தில் வந்தவர் காணவில்லை என்றும், மகனை கடத்தியவர்கள் 10 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குன்னூர் டிஎஸ்பி முத்தமிழ் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.