Asianet News TamilAsianet News Tamil

ஓடும் ரயிலிலும் கைவரிசை காட்டிய பலே கொள்ளையர்கள் - அலட்சியமாக பதிலளித்த ரயில்வே பெண் ஆய்வாளர்..!

The police are searching for the victims who have seized 15 shaving shawls from two women in a train running near Katpadi.
The police are searching for the victims who have seized 15 shaving shawls from two women in a train running near Katpadi.
Author
First Published Oct 30, 2017, 4:29 PM IST


காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இரண்டு பெண்களிடம் 15 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

கோவையை சேர்ந்த திவ்ய பாரதி என்பவரும் மற்றொரு மூதாட்டி ஒருவரும் திருவனத்தபுரதில் இருந்து ஹைதராபாத் செல்லும் சபரி விரைவு தொடர் வண்டியில் நேற்றூ இரவு சென்று கொண்டிருந்தனர். 

காட்பாடி அருகே கிளிதான் பட்டறை என்ற இடத்தில் ரயில்சமிக்கைக்காக மிகவும் வேகம் குறைந்த அளவில் சென்று கொண்டிருந்தது.
 
அப்போது,ரயிலில் வந்த மர்மகும்பல் அந்த பெண்கள் அணிந்திருந்த சுமார் 15 நகையை பறித்து கொண்டுரயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடினர்.

இதுகுறித்துஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த கொள்ளை சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தன் உறவினருடன் தொலைபேசியில் பேசியவாரே தகவல் கொடுக்க ஒரு மணி நேரம் ஆகும் வேண்டுமென்றால் காத்து இருந்து பெற்று கொள்ளுங்கள் என்று அலட்சியமாக பதில் அளித்தார். 

செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கே இந்த நிலைமை என்றால் புகார் அளிக்க வரும் பொதுமக்களின் நிலைமை என்னவாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios