The owner of a letter written by Rat

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் எலி தொல் காரணமாக ஏர் இந்திய விமானம் புறப்பட சுமார் 9 மணி நேரம் தாமதமானது. விமானம் புறப்பட இருந்த நிலையில் எலிகளின் நடமாட்டத்தைக் கண்ட பயணிகள், இது குறித்து புகார் அளித்தனர். 

இதன் பின்னர், ஏர் இந்திய ஊழியர்கள், 9 மணி நேரம்மாக போராடி எலியை விரட்டினர். இதன் பின்பே ஏர் இந்திய விமானம், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது சென்றது. விமானத்தில் மட்டுமல்ல, ரயில்களிலும் பேருந்துகளிலும் எலிகளின் தொந்தரவால் பாதிக்கப்படாதவர்களே இருக்க முடியாது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடையில் இருந்த பொருட்களை எலி தின்று வந்ததால், ஆத்திரமடைந்த கடையின் முதலாளி, எலியைப் பிடித்து அதன் நான்கு கால்களையும் கட்டிவைத்து அடித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது வட இந்தியாவில் நடந்தது. ஆனால், அந்த எலிக்கு ஆயுசு அதிகம்போல. திடீரென கட்டைப் பிரித்துக் கொண்டு தப்பித்து ஓடிவிட்டது.

கடைகளில் எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த, கடை முதலாளியும், ஊழியர்களும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், எலிகளின் நடமாட்டம் குறைந்தபாடில்லை என்றே கடை முதலாளிகள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் திருநெல்வேலியில் உள்ள கடை ஒன்றில் எலியை ஒழிக்க முடியாத கடையின் முதலாளி, எலி அண்ணே தயவு செய்து இங்குள்ள பொருட்களை சேதப்படுத்த வேண்டாம் என்று எழுதி ஒட்டி வைத்துள்ளார்.

திருநெல்வேலியில் வள்ளியப்பன் ஸ்டோர் என்ற கடை உள்ளது. இந்த கடையில் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. எலிகளைக் கட்டுப்படுத்த, கடை முதலாளி பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்து வந்துள்ளார். ஆனாலும் எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

அதனால் கடையின் முதலாளி நூதன முறையில் ஒரு வழியைக் கையாண்டுள்ளார். பேப்பர் ஒன்றில், எலி அண்ணே, தயவு செய்து இங்குள்ள பொருட்களைச் சேதப்படுத்த வேண்டாம் - நிர்வாகம் என்று எழுதி ஒட்டி வைத்துள்ளார். 

இதில் என்ன ஆச்சரியம் என்றால், கடையில் எலிகளின் தொல்லை குறைந்து விட்டதாம். ஒருவேளை எலிக்கு தமிழ் எழுத படிக்க தெரியுமோ? என்னவோ? ஆனா இப்ப வர்ற தலைமுறைக்குத்தான் தமிழ் சுத்தமா வரலை...!