Asianet News TamilAsianet News Tamil

Pongal Special Bus :பொங்கல் சிறப்பு பேருந்து எத்தனை.? எங்கிருந்து இயக்கப்படும்.?வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு 16ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு சிறப்பு பேருந்துகள் எத்தனை, எந்த பகுதிகளில் இருந்து இயக்குவது என்பது குறித்து வருகிற 8 ஆம் தேதி போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. 

The notification regarding the Pongal special bus will be released on the 8th KAK
Author
First Published Jan 5, 2024, 10:16 AM IST

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊரில் கொண்டாட சென்னை மற்றும் வெளியூரில் பணிக்காக வந்தவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் ரயில், பேருந்துகளின் மூலம் சொந்த ஊருக்கு செல்வார்கள். எனவே இந்தாண்டும் பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.  

கடந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுது தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டு சென்னையில் இருந்து மட்டும் 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனையடுத்து பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்து தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இது தொடர்பாக ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிட போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. 

The notification regarding the Pongal special bus will be released on the 8th KAK

8ஆம் தேதி சிறப்பு பேருந்து அறிவிப்பு

தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வரும் 8ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துறை செயலாளர், போக்குவரத்துறை ஆணையர், போக்குவரத்துறை மண்டல மேலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இதனையொட்டி போக்குவரத்து நெரிசல் இன்றி பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படக்கூடிய பேருந்துகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாக உள்ளது.

The notification regarding the Pongal special bus will be released on the 8th KAK

கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்து சேவை

இந்த ஆண்டு புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் துவக்கப்பட்ட நிலையில், பேருந்து சேவை இயக்கப்படுவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. மேலும் வக்கம் போல்  சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள கூடாது.!எந்த விடுப்புகளையும் எடுக்காமல் பணிக்கு வர வேண்டும்- போக்குவரத்து துறை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios