Asianet News TamilAsianet News Tamil

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு ;வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - எச்சரிக்கை விடுக்கும் மத்திய நீர்வள ஆணையம்...!

The new windfall in the Bay of Bengal is likely to cause heavy rainfall in northern Tamil Nadu
The new windfall in the Bay of Bengal is likely to cause heavy rainfall in northern Tamil Nadu
Author
First Published Dec 1, 2017, 8:07 PM IST


வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வால் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் ஓகி புயல் காரணமாக கன்னியாக்குமரி, நெல்லை மாவட்டங்களில் சாலையெங்கும்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இரண்டு மாவட்டஙகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. 

மேலும் ரயில் தண்டவாளங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வால் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அடுத்த 2 - 3 நாட்களுக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios