வாழப்பாடியில் ஒரு வயது மகனை கிணற்றில் தூக்கிப் போட்டுவிட்டு, தாயும் குதித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவன் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வாழப்பாடியை அடுத்துள்ள முத்தம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பெரியதம்பி மகன் செந்தில்குமார் (38). இவர் தினசரி நாளிதழ் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவி (19), மகன் தரணீஷ் (1).

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை தேவி தனது மகன் தரணீஷை விவசாயக் கிணற்றில் தூக்கி போட்டுவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தேவியின் தந்தை ஆறுமுகம் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கணவன் செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை பெரியதம்பி ஆகியோர் தேவியை சித்திரவதை செய்ததாகவும் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தேவிக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளே ஆனதால் ஆத்தூர் கோட்டாட்சியர் ம.செல்வன் விசாரித்து வந்தார்.

இந்த நிலையில், செந்தில்குமார் (37), பெரியதம்பி (64) ஆகியோரை வாழப்பாடி காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சேலம் சிறையில் அடைத்தனர்.