Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rains : தமிழகத்தை தாக்கும் புதிய புயல்… வானிலை மையம் எச்சரிக்கை… மறுபடியும் முதல்ல இருந்தா ?

தமிழகத்தை புதிய புயல் ஒன்று தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

 

The Meteorological Department has warned that a new storm will hit Tamil Nadu
Author
Tamilnadu, First Published Nov 28, 2021, 7:50 AM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதனால் சென்னை,காஞ்சிபுரம்,கடலூர்,தூத்துக்குடி என மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில்,  தமிழகத்தை மீண்டும் ஒரு புயல் தாக்கக் கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

The Meteorological Department has warned that a new storm will hit Tamil Nadu

தற்போது குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஏரி,குளம்,ஆறு என எல்லா நீர்நிலைகளும் நிரம்பி வழிந்து வருகின்றது.ஒருபக்கம் மழையால் மக்கள் ,மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னொரு பக்கம் மழையினால் மக்களின் வீடு,விவசாயம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

The Meteorological Department has warned that a new storm will hit Tamil Nadu

இந்நிலையில்,  திங்கட்கிழமையான நாளை அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் (டிசம்பர் 1 ) மேற்கு-வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

The Meteorological Department has warned that a new storm will hit Tamil Nadu

இந்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு தொடர்ந்து மழை இருக்குமா? என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசனிடம் கேட்டபோது, ‘அந்தமானில் உருவாகும் தாழ்வு பகுதி, வலுப்பெற வாய்ப்பு இருப்பதால், தமிழகத்துக்கு தற்போது வரை வாய்ப்பு இல்லை. ஆனால் அது வலுப்பெறாமல் கீழ் நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்துக்கு மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது' என்றார். இதற்கு தமிழக மக்களின் ரியாக்சன், மறுபடியும் முதல்ல இருந்தா…! 

Follow Us:
Download App:
  • android
  • ios