The incident that took place in the middle of Chidambaram has caused a shock.

சிதம்பரம் அருகே நடுரோட்டில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிதம்பரம், சிவசக்தி நகர் 4 வது கிராஸில் வசித்து வந்தவர் பழனிசாமி. இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து கிளம்பி இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். 

அப்போது சிதம்பரம் அருகே கூத்தன்கோயில் கிராமத்தில் மர்ம நபர்கள் சிலர் பழனிசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து ஓடினர். இதில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைபார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ் பி .விஜயகுமார் நேரில் பார்வையிட்டு குற்றவாளிகளை பிடிக்க தனி படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.