மதுரையில் தாஜூதீன் என்பவரிடம் NIA அதிகாரிகள் 2 மணி நேர விசாரணைக்கு பின் செல்போனை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் என்ஐஏ விசாரணை
சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் அவ்வப்போது என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில். மதுரையில் நடைபெற்ற சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஹாஜிமார் பகுதியைச் சேர்ந்த தாஜுதீன் ஹமித் என்பவரை என் ஐ ஏ அதிகாரிகள் இன்று காலை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பீகாருக்கு சென்றபோது சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிய சிலரை கைது செய்தனர். இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக தாஜுதீனிடம் என்ஐஏ விசாரணை நடத்தியுள்ளனர்.

அச்சுறுத்தும் என்ஐஏ.?
காலை 6 மணிக்கு நடைபெற்ற சோதனையானது 2 மணி நேரத்தில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தாஜுதீன் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர். சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாஜூதீன், தான் பீகாரருக்கு செல்லாத நிலையில் பீகார் வழக்கு தொடர்பாக என்னிடம் NIA அதிகாரிகள் தன்னிடம் விசாரணை நடத்தி செல்போனை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தார். இது போன்று இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படியுங்கள்
மாவட்ட தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; கன்னியாகுமரியில் உச்சக்கட்ட பரபரப்பு
