The incident happened in Chennai near Kodungaiyur in a firefight in a cylinder explosion in the town of Muthumalai.

சென்னை - கொடுங்கையூர் அருகே முத்தமிழ் நகரில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த கீதா உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 125-வது தெருவை சேர்ந்தவர் பாபு. இவர் தனது மனைவி தீபா, மகள் ‌ஷர்மிளா, மகன் கிஷோர் ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் பாபுவின் வீட்டில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதில் வீட்டின் பக்கவாட்டு சுவர்கள், பால் கனி, மாடிப்படி ஆகியவை இடிந்தது.

இந்த விபத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாபு, தீபா, ‌ஷர்மிளா, கிஷோர் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். 

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணையில், கியாஸ் கசிவு காரணமாகவே சிலிண்டர் வெடித்தது தெரிய வந்தது. அப்போது குளிர்சாதன பெட்டியும் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக தெரிகிறது. 

இந்நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கீதா என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.