The guy who did not have a family pedestal came to Bill Chelsea who bought the item
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் குடும்ப அட்டையே இல்லாதவருக்கு ரேசனில் பொருள்கள் வாங்கிய பில் செல்போனுக்கு குறுந்தகவலாக வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம், இடையர்பாளையம், அன்பு நகர் 3-வது வீதியில் குடியிருப்பவர் டி.சரவணன். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனக்கு குடும்ப அட்டைக் கோரி கோயம்புத்தூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு விண்ணப்பத்து இருந்தார்.
பலமுறை அலுவலகத்திற்கு நேரில் சென்று வலியுறுத்தியும் இதுவரை அவருக்கு குடும்ப அட்டை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த மாதம் இவரது செல்போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், ரேசன் கடையில் பொருள்கள் வாங்கியதற்கான பில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
குடும்ப அட்டையே இல்லாமல் பொருள்கள் வாங்கியதற்கான குறுந்தகவல் வந்ததால் டி.வி.எஸ். நகர் ரேசன் கடைக்குச் சென்று முறையிட்டார் சரவணன்.
அங்கு அவர்கள் , சரவணனை வட்டாட்சியர் அலுவலகம் செல்லுமாறு கூறினர். அங்கு சென்று கேட்டும் சரியான பதில் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தவர் இதுகுறித்து புகார் மனு அளித்துள்ளார்.
