The great Pandian wife Panureka said that the inspector Munischer was not a friend of her husband.
ஆய்வாளர் முனிசேகர் தமது கணவரின் நண்பர் எனவும் திட்டமிட்டு அவரை சுட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் பெரிய பாண்டியன் மனைவி பானுரேகா தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க சென்ற போது பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெரியபாண்டியை சுட்டது யார் என்பது குறித்து மர்மம் நீடித்துக்கொண்டே வருகிறது. ராஜஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பெரியபாண்டியன் உடலில் இருந்த குண்டு உடன் சென்ற முனிசேகர் துப்பாக்கியில் இருந்தது தான் எனவும் முனிசேகர் தவறுதலாக சுட்டதால் தான் பெரியபாண்டி உயிரிழந்ததாகவும் ராஜஸ்தான் போலீஸ் தகவல் தெரிவித்திருந்தது.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் மற்றும் உறவினர்கள் சிலரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஆய்வாளர் முனிசேகர் தமது கணவரின் நண்பர் எனவும் திட்டமிட்டு அவரை சுட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் பெரிய பாண்டியன் மனைவி பானுரேகா தெரிவித்துள்ளார்.
போலீசாரின் விசாரணை அறிக்கை வர 20 நாட்கள் ஆகும் எனவும் அறிக்கை வந்த பிறகே உண்மை தெரியவரும் எனவும் குறிப்பிட்டார்.
அரசு அறிவித்த நிவாரணத்தொகை வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
