தமிழகத்தில் ஸ்கேட்டிங் போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் அதிகப்படுத்தனும்- ஆசிய போட்டி வீரர் கோரிக்கை
தமிழ்நாட்டில் ஸ்கேட்டிங் போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகவும் அதனை இன்னும் மேம்படுத்தி தர வேண்டும் எனவும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஏஸ் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற அவிக்ஷித் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் விருது வழங்கும் விழா
வாழ்நாள் தொழிற்துறை சாதனையாளர், கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் "Chariot Awards" வழங்கி ரோட்டரி மெட்ராஸ் சவுத் வெஸ்ட் சிறப்பித்தது வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இந்த ஆண்டிற்கான 5 விருதுகள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் ததார் முன்னிலையில் வழங்கப்பட்டது.
மெட்ராஸ் டிஸ்லெக்சியா சங்கத்தின் தலைவர் டி.சந்திரசேகருக்கு கௌரவத்திற்கான Chariot Award வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஏஸ் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற அவிக்ஷித் விஜய் விஸ்வநாத்திற்கு விளையாட்டிற்கான விருதும், கர்நாடக பாடகி ஸ்ரீவித்யா வாசுதேவனுக்கு கலைக்கான "Chariot Awards" வழங்கப்பட்டது.
விளையாட்டு வீரருக்கு விருது
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி ஏஸ் ஸ்கேட்டிங் வீரர், அவிக்ஷித் விஜய், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற போது சீனாவில் இந்திய தேசிய கீதம் ஒலித்தது தன் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்றார். தற்போது தமிழ்நாட்டில் ஸ்கேட்டிங் போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகவும் அதனை இன்னும் மேம்படுத்தி தர வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்த அவர், இந்த சின்ன வயதில் ரோட்டரி மெட்ராஸ் சௌத் வெஸ்ட் சேரியட் விருது பெற்றதற்கு தான் கடன்பட்டுள்ளதாகவும் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்