The girl was raped by her father

திருப்பரங்குன்றம் அருகே மகளையே பாலியல் வன்புணர்வு செய்த காமக் கொடூர தந்தையை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் சுந்தரம் தையல் மெஷின் மெக்கானிக்-ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமாணமாகி மனைவி இறந்து விட்டார். சரவணன் 14 என்ற மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

மனைவி இறந்துவிட்டதால், முதல் மனைவியின் தங்கை பிரேமாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சுந்தரம் கடந்த சில மாதங்களாக தான் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்நிலையில் நேற்று மகன் சரவணன் உறவினர் ஒருவரு வீட்டுக்கு சென்றிருந்தான். இரண்டாவது மனைவி பிரேமாவும் வேலைக்கு சென்றுவிட்டார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமி்யை தந்தை சுந்தரம் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது,

இதுகுறித்து சிறுமி, அக்கம்பக்கத்தினரிடம் அழுதபடியே கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பிரேமா ஆகியோர் சிறுமியை அழைத்துக் கொண்டு, திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பெற்ற மகளையே இப்படு காம வெறியாட்டம் அடிய கொடூர தந்தை சுந்தரம் பற்றி புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.