Asianet News TamilAsianet News Tamil

புதிய இடத்தில் அரிகொம்பன் யானை என்ன செய்கிறது.? எப்படி உள்ளது.? வனத்துறை செயலாளர் கூறிய புதிய தகவல்

 தேனி மாவட்ட மக்களையும் அச்சுறுத்திய அரிகொம்பன் யானையை பிடித்த வனத்துறையினர் தற்போது களக்காடு முண்டந்துறை பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், யானை நல்ல நிலையில் இருப்பதாகவும், உணவு சாப்பிடுவதாகவும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

The Forest Secretary said that Arikomban elephant is in good condition
Author
First Published Jun 7, 2023, 3:45 PM IST

அரிகொம்பன் யானை

கேரளாவின் மூணாறு பகுதியில் வலம் வந்து மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் என்ற அரிசி கொம்பன் யானையை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்து, தமிழக கேரளா எல்லை பகுதியான பெரியாறு புலிகள் காப்பகத்தில் விட்டனர். இதனையடுத்து தமிழகத்தின் மேகமலை, இரவங்கலாறு பகுதிகளில் வளம் வந்த யானை கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சப்படுத்தியது. அப்போது யானை தாக்கியதில் காவலாளி ஒருவர் உயிர் இழந்தார். இதனையடுத்து 3 கும்கி யானை உதவியோடு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் மயக்க ஊசி மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,முதுமலையிலிருந்து பழங்குடியின மக்களான பொம்மன் குழுவினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

The Forest Secretary said that Arikomban elephant is in good condition

குட்டியாறு டேம் பகுதியில் அரிகொம்பன்

சின்னமனூர் அருகே உள்ள  பெருமாள் கோவில் மலைப்பகுதியில் வலம் வருவதை அறிந்த வனத்துறையினர் அதனை கண்காணித்து வந்த நிலையில், அரிக்கொம்பன் யானைக்கு மருத்துவர்கள் 2 முறை மயக்க ஊசி செலுத்தி அதனை மயக்கம் அடைய செய்து பிடித்தனர். இதனையடுத்து யானையை பிரத்யேக லாரியில் கொண்டு சென்ற வனத்துறை அதிகாரிகள், யானை நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு வனப்பகுதி வழியில் உள்ள  குட்டியாறு டேம் என்ற பகுதியில் அரிக்கொம்பன் யானை விடுவிக்கப்பட்டது. யானையின் செயல்பாடுகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

 

உணவு அருந்தும் அரிகொம்பன்

இந்தநிலையில் யானையின் உடல்நிலை தொடர்பாக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், அரிகொம்பன் யானை அழகிய இயற்கை சூழலுக்கு இடம்பெயர்ந்த பிறகு நன்றாக உணவு அருந்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் யானையின் உடல்நிலை மற்றும் நடமாட்டம் குறித்து தமிழ்நாடு வனத்துறை கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

கோதையாறு அணை பகுதியில் உல்லாசமாக உலா வரும் அரிகொம்பன்

Follow Us:
Download App:
  • android
  • ios