விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மளிகை கடையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலாவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

விழுப்புரம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருட்கள் சட்ட விரோதமாக விற்கப்படுவதாக உணவு பாதிகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள மளிகை கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா இருப்பது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து அந்த பான் மசாலா மற்றும் குட்காவை அதிகாரிகள் பற்முதல் செய்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  

தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.