The first exam was held on June 18 in order to fill 985 vacancies in civil services including IAS IFS IPS and IRS.
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமலஹாசன் தேர்வில் பிட்டு அடிப்பது போல், ஐ.ஏ.எஸ் தேர்வில் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதிலளித்த ஐபிஎஸ் அதிகாரி பிடிபட்டுள்ளார்.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்றது.
முதல்நிலைத் தேர்வில் 13,350 பேர் மெயின் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். மெயின் தேர்வு அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.
அதன்படி தமிழ்நாட்டில் சென்னை உட்பட நாடு முழுவதும் 24 முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.
இதைதொடர்ந்து சென்னையில், நடைபெற்றுவரும் ஐ.ஏ.எஸ் தேர்வில் ஐபிஎஸ் அதிகாரி சபீஸ் கபீர் என்பவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமலஹாசன் தேர்வில் பிட்டு அடிப்பது போல் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதில் கேட்டு தேர்வு எழுதியுள்ளார்.
இதைப்பார்த்த போலீசார் சபீர் கபீரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரி கபீருக்கு ஐதராபாத்தில் இருந்து உதவிய மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
