ஷாப்பிங் செய்யும்போது, ரசிகர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு, மாறுவேடம் அணிந்து ஷாப்பிங் செய்கிறாராம் தொகுப்பாளினி டிடிவி.

தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர், சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தைக் கொண்டவர் இவர். அவரது குறும்பான பேச்சுக்கும், நிகழ்ச்சியை நடத்தும் விதத்துக்கும் பலர் ரசிகர்களாக உள்ளனர்.

முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வரும் திவ்யதர்ஷினி நீலகண்டன், தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் இவர் நடித்து வருகின்றார். காதலர் தின வெளியீடாக உலவிரவு என்ற ஆல்பம் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில், மதன் கார்க்கி பாடல் வரிகளில் வெளியான இந்த ஆல்பம் பெரும் வரவேற்பு பெற்றது.

இவ்வளவு பிரபலமான ஒருவர், ஷாப்பிங் செய்தால், அவரை ரசிகர்கள் மொய்த்து விடுவார்கள். ஷாப்பிங் செய்யாமலும் இருக்க முடியாது... இந்த நிலையில் தொகுப்பாளினி நேற்று ஷாப்பிங் செய்துள்ளார் என்றால் பாருங்களேன். அதுவும் மாறு வேடத்தில்... எப்படி என்கிறீர்களா? இப்படித்தான்...

இது குறித்து டிடி ஒரு புகைப்படம் ஒன்றை, அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற ஆடையுல், அவர் முகம் முழுவதையும் மூடிக் காணப்பட்டார். ஷாப்பிங் செய்யும்போது ரசிகர்கள் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக திவ்யதர்ஷினி இவ்வாறு செய்துள்ளார்.