Asianet News TamilAsianet News Tamil

மின் கட்டணம் கட்டவில்லை என்று எஸ்எம்எஸ் வந்தால் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்- மின்சார வாரியம் எச்சரிக்கை

மின் கட்டணம் கட்டவில்லையென மெசேஜ் வந்தால் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம், இது ஒரு மோசடி மெசேஜ்  என தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

The Electricity Board warns not to click on the link if you receive a text message saying that you have not paid your electricity bill KAK
Author
First Published Oct 31, 2023, 11:37 AM IST

தொழில்நுட்ப வளர்ச்சியில் மோசடி

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள்  மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி பணம் பறித்து ஏமாற்றுதல், புகைப்படத்தை மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டுதல் என்று மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இதன் அடுத்த கட்டமாக மொபைல் போனுக்கு வரும் குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் போதும் நமது வங்கி கணக்கில் இருக்கும் பணம் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

The Electricity Board warns not to click on the link if you receive a text message saying that you have not paid your electricity bill KAK

இது தொடர்பாக பல்வேறு புகார்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் உங்கள் வீட்டில் மின் கட்டணம் கட்டவில்லையெனவும், இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட இருப்பதாக தெரிவித்து எஸ்எம்எஸ் வரும். இதனை திறந்து பார்த்தால் அதில் ஒரு லிங்க் இருக்கும். இதனை திறந்தால் நமது வங்கியில் உள்ள பணம் திருடப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்ந்து புகார் வந்ததையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளது. அப்படி குறுஞ்செய்தி வந்தால்

1. பதட்டம் அடைய வேண்டாம், 2. உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும், 3. அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம், 4. இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம், 5. உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும், 6. உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும் என தெரிவித்துள்ளது. எனவே இது போன்ற குறுஞ்செய்தி  மோசடி மெசேஜ் என மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

நீட் அச்சத்தில் மாணவி தற்கொலை..! உயிர்க்கொல்லி நீட்டுக்கு முடிவு கட்டனும்- அன்புமணி

Follow Us:
Download App:
  • android
  • ios