'பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது..' குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை.!!

பள்ளி இறுதி தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

The Department of Education has issued an important announcement regarding the final examination

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு :

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள்-கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்தன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 

The Department of Education has issued an important announcement regarding the final examination

இறுதி தேர்வு கிடையாது :

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருப்பதாவது, ‘ ஒன்று முதல் 5 -ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது. அதே போல் 6-9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வரும் மே மாதம் 5 ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும். 

The Department of Education has issued an important announcement regarding the final examination

பள்ளிகள் எப்போது தொடங்கும் ? :

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 30 ம் தேதி வெளியிடப்படும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2-4 ம் தேதி வரை நடைபெறும். 2022-23 ம் ஆண்டு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 24 ம் தேதி துவங்குகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13 ம் தேதி துவங்கும் என தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios