The court is forbidden by the court

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இரட்டை இருப்பிடச் சான்று தொடர்பான தமிழக அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. தியாகராஜன், மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இரட்டை இருப்பிடச் சான்று அளித்து பலர் தமிழக மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்றும், இரட்டை இருப்பிடச் சான்று அளித்து பலர் தமிழக மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, இன்று நீதிமன்றத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையில், மருத்துவ படிப்பில் சேர இரட்டை இருப்பிடச் சான்று தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் உத்தரவிட்டனர்.